/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்ற மருமகன் கைது
/
மாமியாரை பலாத்காரம் செய்ய முயன்ற மருமகன் கைது
ADDED : ஜூலை 16, 2025 11:09 PM
கோவை; மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற, மருமகனை போலீசார் கைது செய்தனர்.
கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 51. இவருக்கு, 30 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இவர் மனைவி உயிரிழந்தார்.
இவருடன், 75 வயதான மாமியாரும் தங்கி உள்ளார். குடிப்பழக்கம் உள்ள, மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு, மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது அங்கிருந்த மாமியாரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
இதையடுத்து மணிகண்டனுக்கு பொதுமாத்து கொடுத்து, கோவை மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிந்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.