ADDED : ஆக 06, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; வேடபட்டி காயத்ரிதேவி கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து, மண்டல பூஜை நடந்து வருகிறது. இதில் ஆன்மிக சொற்பொழிவாளர் மோகனாவின் மூக்க பஞ்சசதி மற்றும் சவுந்தர்யலஹரி இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது. திரளா னோர் கேட்டு ரசித்த னர். ஸ்ரீ மூக்கர் அருளிய மூக்க பஞ்சசதி என்பது காமாட்சி அம்மனை போற்றிப்பாடும் ஒரு துதி தொகுப்பு.
இந்த துதி தொகுப்பை, முழுமையாக பாராயணம் செய்வதால், பல நன்மைகள் கிட்டும் என்பது இறை நம்பிக்கை. அதனால் அனைவரும் அன்றாடம் பாராயணம் செய்யுமாறு, கோவில் அறங்காவலர் ரேவதிபாலாஜி மற்றும் மண்டல பூஜை ஒருங்கிணைப்பாளர் ஜானகி ராமச்சந்திரன் ஆகியோர் வலியுறுத்தினர்.