/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெற்கு ஆசிய காரத்தே மாணவர்கள் வெற்றி
/
தெற்கு ஆசிய காரத்தே மாணவர்கள் வெற்றி
ADDED : ஜன 15, 2024 10:03 PM

பொள்ளாச்சி:தெற்கு ஆசிய அளவிலான கராத்தே போட்டியில், பொள்ளாச்சி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தெற்கு ஆசிய அளவிலான கராத்தே போட்டி, புதுடில்லி தல்கத்தோரா உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்தும், 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில், பொள்ளாச்சி இன்டர்நேஷனல் சின்டோகன் கராத்தே பள்ளியின் சார்பாக, 45 கிலோ - 50 கிலோ குமிட்டோ பிரிவில் பிளாக் பெல்ட் அனிஷா மூன்றாவது இடத்திலும், பிரவுன் பெல்ட் கோகுல் 55 - 60 கிலோ எடை பிரிவில் மூன்றாவது பரிசும் பெற்றனர்.
அதில், 50 - 55 கிலோ எடை பிரிவில், பிரவுன் பெல்ட் ராமானந்த், முதல் பரிசு பெற்றார். பிளாக் பெல்ட் தில்லை குமாரவேல், மூன்றாமிடம் பெற்றார். இத்தகவலை, இந்திய தலைமை கராத்தே பயிற்சி ஆசிரியர் பஞ்சலிங்கம் தெரிவித்தார்.