/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னிந்திய கால்பந்து; அசத்திய வீரர்கள்
/
தென்னிந்திய கால்பந்து; அசத்திய வீரர்கள்
ADDED : ஜன 16, 2024 11:31 PM
கோவை;புலியகுளம் கால்பந்து கழகம் சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு தென்னிந்திய அளவில், ஐவர் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான போட்டிகள் ஜன., 12ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை புலியகுளம் புனித அந்தோணியார் பள்ளி மைதானத்தில் (பிளட் லைட்) மின்னொளியில் நடந்தது.
இதில், 14, 17 வயது மற்றும் ஓபன் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 14 வயது பிரிவில், 12 அணிகள், 17 வயது பிரிவில், 26 அணிகள் மற்றும் ஓபன் பிரிவில் 32 அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டி முடிவுகள்
இதன் 14 வயது பிரிவில், கேரளா பிளையர் பீட் கால்பந்து கிளப் அணி 3 - 1 என்ற கோல் கணக்கில், கோவை பிரைடு கால்பந்து கிளப் அணியை வீழ்த்தி, முதலிடம் பிடித்தது.
17 வயது பிரிவில், தஞ்சாவூர் மரடோனா கால்பந்து கிளப் அணி, 2 - 1 என்ற கோல் கணக்கில் சென்னை ஜேப்பியார் பள்ளி அணியை வீழ்த்தி, கோப்பையை வென்றது.
ஆண்கள் ஓபன் பிரிவில், கேரளா அக்வா சப் அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சென்னை ஜேப்பியார் பல்கலை அணியை வீழ்த்தி, கோப்பையை தட்டிச்சென்றது.
ஓபன் பிரிவில் முதல் பரிசாக ரூ. 75 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.50 ஆயிரம்; 17 வயது பிரிவில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 10 ஆயிரம், 14 வயது பிரிவில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 7 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சரவணகுமார், எம்.கே., குழும இயக்குனர் மணிகண்டன், ஆர்ய வைத்திய பார்மசி நிர்வாக இயக்குனர் தேவிதாஸ் வாரியர், புலியகுளம் அந்தோணியார் சர்ச் பங்கு தந்தை ராயப்பன், நிராஸ் இயக்குனர் கிளாடியஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

