/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவில் தென் மண்டல வாலிபால்; 14 பேர் அடங்கிய பல்கலை அணி 'ரெடி'
/
கேரளாவில் தென் மண்டல வாலிபால்; 14 பேர் அடங்கிய பல்கலை அணி 'ரெடி'
கேரளாவில் தென் மண்டல வாலிபால்; 14 பேர் அடங்கிய பல்கலை அணி 'ரெடி'
கேரளாவில் தென் மண்டல வாலிபால்; 14 பேர் அடங்கிய பல்கலை அணி 'ரெடி'
ADDED : டிச 17, 2024 11:57 PM
கோவை; தென் மண்டல பல்கலைகளுக்கு இடையே நடக்கும் வாலிபால் போட்டிக்கு, 14 வீரர்கள் அடங்கிய பாரதியார் பல்கலை அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலையில், தென் மண்டல பல்கலைகளுக்கு இடையே ஆண்களுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல், 22ம் தேதி வரை நடக்கிறது. இதற்கென, 14 பேர் அடங்கிய அணி பல்கலைகளில் இருந்து அனுப்பிவைக்கப்படுகின்றன.
பாரதியார் பல்கலையில் இருந்து அணி தேர்வு செய்யப்படாததால் வீரர்களிடையே குழப்பம் நிலவியது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது.
மறுநாள், 12, 13ம் தேதிகளில் ஏ, பி, சி, டி என, நான்கு மண்டலங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு தலா இரு அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
தொடர்ந்து, 14, 15ம் தேதிகளில் மண்டலங்களுக்கு இடையேயான போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா மிசன் வித்யாலயா கல்லுாரியில் நடந்தது. முதல் சுற்றானது, 'நாக்-அவுட்' முறையில் நடத்தப்பட்டு நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டன.
தொடர்ந்து, நான்கு அணிகளும் 'லீக்' முறையில் விளையாடின. இப்போட்டிகளில் இருந்து சிறந்த வீரர்கள், 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் கேரளத்தில் நடக்கும், தென் மண்டல போட்டியில் பங்கேற்க புறப்பட்டு சென்றுள்ளனர். பல்கலை அணி வெற்றி பெற, உடற்கல்வி இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.