/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென் மாநில கால்பந்து போட்டி நாராயணகுரு கல்லுாரியில் துவக்கம்
/
தென் மாநில கால்பந்து போட்டி நாராயணகுரு கல்லுாரியில் துவக்கம்
தென் மாநில கால்பந்து போட்டி நாராயணகுரு கல்லுாரியில் துவக்கம்
தென் மாநில கால்பந்து போட்டி நாராயணகுரு கல்லுாரியில் துவக்கம்
ADDED : பிப் 22, 2024 05:49 AM

கோவை: கல்லுாரி மாணவர்களுக்கான, தென் மாநில அளவிலான கால்பந்து போட்டி, நாராயணகுரு கல்லுாரியில் நேற்று துவங்கியது.
ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி சார்பில், தென் மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு எஸ்.என்.ஜி.சி., சுழற்கோப்பைக்கான போட்டி, க.க.சாவடி நாராயணகுரு கல்லுாரி மைதானத்தில், நேற்று முதல் வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 21 அணிகள் நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன.
போட்டியை, ஸ்ரீ நாராயணகுரு கல்வி அறக்கட்டளையின்நிர்வாக அறங்காவலர் பங்கஜ்குமார் துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் கல்பனா, உடற்கல்வி இயக்குனர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல் போட்டியில், கோவை சி.எம்.எஸ்., கல்லுாரி அணி 3 - 2 (டை பிரேக்கர்) என்ற கோல் கணக்கில், கோழிக்கோடு தேவகிரி கல்லுாரி அணியையும், இரண்டாம் போட்டியில் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி 3 - 1 என்ற கோல் கணக்கில், என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அணியையும் வீழ்த்தின.