sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

8 மாவட்டங்களில் சராசரியை ஒட்டியே தென்மேற்கு பருவ மழை கிடைக்கும்: கோவை வேளாண் பல்கலை கணிப்பு

/

8 மாவட்டங்களில் சராசரியை ஒட்டியே தென்மேற்கு பருவ மழை கிடைக்கும்: கோவை வேளாண் பல்கலை கணிப்பு

8 மாவட்டங்களில் சராசரியை ஒட்டியே தென்மேற்கு பருவ மழை கிடைக்கும்: கோவை வேளாண் பல்கலை கணிப்பு

8 மாவட்டங்களில் சராசரியை ஒட்டியே தென்மேற்கு பருவ மழை கிடைக்கும்: கோவை வேளாண் பல்கலை கணிப்பு


ADDED : மே 29, 2025 06:49 AM

Google News

ADDED : மே 29, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'கோவை, திருப்பூர், கரூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், நடப்பாண்டு சராசரியை ஒட்டியே, தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது' என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி, செப்., வரை பெய்யும். இவ்வாண்டு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே துவங்கியிருக்கிறது. கேரள வனப்பகுதி, மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் பாலக்காடு கணவாய் உள்ளிட்ட பகுதிகளில், கன மழை காணப்படுகிறது.

பருவ மழையை எதிர்கொள்ள, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, முன்னறிவிப்பு வெளியிடுவது வழக்கம்.

இதன்படி ஆய்வு மையத்தின் கணிப்பு:

கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய எட்டு மாவட்டங்களில் சராசரிக்கு ஒட்டிய மழைப்பொழிவும், மற்ற மாவட்டங்களில் சராசரி மழையளவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையின் சராசரி மழையளவு 440 மி.மீ., இதில், 430 மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது; இரண்டு சதவீதம் மட்டுமே மழை குறைய வாய்ப்பிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 450 மி.மீ., கடலுாரில் 370, கள்ளக்குறிச்சியில் 385 மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது.

திருவள்ளூரில் 440, திருவண்ணாமலையில் 449, காஞ்சிபுரத்தில் 462, விழுப்புரத்தில் 405, கிருஷ்ணகிரியில் 377, தஞ்சாவூரில் 315, மயிலாடுதுறையில் 300, திருச்சியில் 260, ஈரோட்டில் 245 மி.மீ., பெய்யலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், மதுரையில் 298, திண்டுக்கல்லில் 296, ராமநாதபுரத்தில் 135, சிவகங்கையில் 421, தேனியில் 205, விருதுநகரில் 175, புதுக்கோட்டையில் 326 மி.மீ., மழை பதிவாக வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 860 மி.மீ., மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு தான் பெய்யும்!



இவ்வளவு தான் பெய்யும்!

மாவட்டம் - சராசரி அளவு (மி.மீ.,) - எதிர்பார்க்கும் அளவு (மி.மீ.,)



இவ்வளவு தான் பெய்யும்!

மாவட்டம் - சராசரி அளவு (மி.மீ.,) - எதிர்பார்க்கும் அளவு (மி.மீ.,)கோவை - 210 - 185திருப்பூர் - 151 - 130நாமக்கல் - 336 - 300கரூர் - 199 - 175கன்னியாகுமரி - 491 - 435திருநெல்வேலி - 128 - 108தென்காசி - 175 - 150துாத்துக்குடி - 67 - 59








      Dinamalar
      Follow us