தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘தரமான விதை விதைத்தால் நல்ல விளைச்சல் பெறலாம்’

‘தரமான விதை விதைத்தால் நல்ல விளைச்சல் பெறலாம்’

‘தரமான விதை விதைத்தால் நல்ல விளைச்சல் பெறலாம்’


ADDED : ஆக 28, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 05:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்: ‘தரமான விதைகளை விதைத்தால், நல்ல விளைச்சல் பெறலாம்’ என, பயிற்சி வகுப்பில் வேளாண் அதிகாரி தெரிவித்தார்.

‘அட்மா’ திட்டத்தில், தரமான விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம், அன்னுார் வேளாண் அலுவலகத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் (பொ) கோமதி தலைமை வகித்து பேசுகையில், ‘‘நல்ல விளைச்சலுக்கும், ஆரோக்கியமான பயிர்களுக்கும், தரமான விதைகள் அவசியம்,’’ என்றார்.

விதை சான்று அலுவலர் சதாசிவம் பேசுகையில், ‘‘தரமான விதை உற்பத்தி செய்ய பயிர்களுக்கு இடையே, உரிய இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். விதைப்பதற்கு முன், நோய் தாக்கிய உடைந்த அல்லது சுருங்கிய விதைகளை நீக்கிவிட்டு, நல்ல முதிர்ச்சி அடைந்த விதைகளை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட பூஞ்சாண கொல்லிகள் அல்லது உயிர் உரங்களை கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்,’’ என்றார்.

வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர் சுகந்தி பேசுகையில், ‘‘பயிர் வளர்ச்சி காலத்தில், இனக்கலப்பு மற்றும் நோயற்ற செடிகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். விதைகள் சரியான ஈரப்பதத்தில் இருக்கும்போது, அறுவடை செய்து உலர்த்தி பாதுகாப்பான இடங்களில் சேமிக்க வேண்டும்,’’ என்றார். துணை வேளாண் அலுவலர் ராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us