தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நடை அடைத்த பின் எஸ்.பி., தரிசனம்: கோவில் பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'

நடை அடைத்த பின் எஸ்.பி., தரிசனம்: கோவில் பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'

நடை அடைத்த பின் எஸ்.பி., தரிசனம்: கோவில் பணியாளர் இருவர் 'சஸ்பெண்ட்'


ADDED : ஜூலை 23, 2025 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2025 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூ: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நடை அடைத்தபின், எஸ்.பி., சுவாமி தரிசனம் செய்ததாக எழுந்த புகாரில், அர்ச்சகர் மற்றும் கோவில் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த நான்கு நாட்களுக்கு முன், இரவு, கோவில் நடை அடைக்கும் நேரத்தில், பழனி பட்டாலியன் எஸ்.பி., பாண்டியராஜன் சுவாமி தரிசனம் செய்து சென்றார்.

இச்சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். ஆகமவிதியை மீறி, எஸ்.பி.,யை சுவாமி தரிசனம் செய்ய வைத்த கோவில் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிவனடியார்கள், கலெக்டர் அலுவலகத்திலும், ஹிந்து முன்னணியினர், அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.

இந்நிலையில், நிர்வாக அனுமதியின்றி தன்னிச்சையாக, எஸ்.பி.,யை சுவாமி தரிசனம் செய்ய வைத்த கோவில் பணியாளர் வேல்முருகன் மற்றும் அர்ச்சகர் சாமிநாதன் ஆகிய இருவரையும், சஸ்பெண்ட் செய்து, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தக்கார் செந்தில்குமார், நேற்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us