/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு ஆயுள் மாவட்ட போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

ADDED : மார் 29, 2025 11:36 PM
கோவை: இருவேறு கொலை வழக்கில் கைதான இருவருக்கு, ஆயுள் தண்டனை பெற்றுத் தர சிறப்பாக பணியாற்றிய போலீசாரை, எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டினார்.
கோவை மாவட்ட பகுதிகளில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து, தண்டனை பெற்றுத்தர எஸ்.பி., கார்த்திகேயன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை, விரைந்து முடிக்க இவர் எடுத்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, ஒரே நாளில் இருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி, கோமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் 21 வயது கல்லுாரி மாணவியை, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சதீஷ்குமார், 35, கடந்த 2021-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த, 70 வயது மூதாட்டியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த கருப்பையா, 25 ஆகிய இருவருக்கு, ஆயுள் தண்டனை பெற்றுத்தர சிறப்பாக செயல்பட்டு, சாட்சிகளை விரைந்து ஆஜர்படுத்திய போலீசாரை, எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டினார்.