/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் மொழியில் பேசுங்கள்! தமிழாசிரியர்கள் அறிவுறுத்தல்
/
தமிழ் மொழியில் பேசுங்கள்! தமிழாசிரியர்கள் அறிவுறுத்தல்
தமிழ் மொழியில் பேசுங்கள்! தமிழாசிரியர்கள் அறிவுறுத்தல்
தமிழ் மொழியில் பேசுங்கள்! தமிழாசிரியர்கள் அறிவுறுத்தல்
ADDED : செப் 17, 2025 09:25 PM

பொள்ளாச்சி; 'பேசும் இடங்களில் எல்லாம் தமிழ்ச் சொற்களிலேயே பேசுங்கள்,' என, பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற விழாவில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம், தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பில் பணி நிறைவு பெற்ற தமிழாசிரியர்களுக்கான பாராட்டு விழா மற்றும் ஆசிரியர் தின விழா, அரிமா சங்கக் கட்டத்தில் நடந்தது.
மாவட்ட தணிக்கையாளர் சென்னியப்பன் வரவேற்றார். கம்பன் கலை மன்றத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
தமிழக தமிழாசிரியர் கழக மாநில மதிப்பியல் தலைவர் நஞ்சப்பனார் 'தமிழும் தமிழனும்' என்ற தலைப்பில் பேசுகையில், 'பேசும் இடங்களில் எல்லாம் தமிழ் சொற்களிலேயே பேசுங்கள். தமிழை குழந்தைகளிடம் கொண்டு செல்லுங்கள்,' என்றார்.
கம்பன் கலை மன்றச் செயலாளர் சிவக்குமார், 'ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைமுறையை முன் தேதியிட்டு அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்,' என வலியுறுத்தினார்.
பணி நிறைவு பெற்ற, 21 தமிழாசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மன்றத் துணைத் தலைவர் அஜ்மல்கான், தமிழாசிரியர் பாபு, தமிழக தமிழாசிரியர் கழக கோவை மாவட்டச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.