காந்தி ஜெயந்தியில் பல துறைகளிலும் சொற்பொழிவாற்றிய பேச்சாளர்கள்
காந்தி ஜெயந்தியில் பல துறைகளிலும் சொற்பொழிவாற்றிய பேச்சாளர்கள்
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:05 PM

தொண்டாமுத்தூர்: குளத்துப்பாளையத்தில், தொண்டாமுத்தூர் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் நடந்த பேச வாங்க நிகழ்ச்சியில், பல்வேறு தலைப்புகளில், பேச்சாளர்கள் சொற்பொழிவாற்றினர்.
தொண்டாமுத்தூர் தமிழ் இலக்கிய பேரவை சார்பில், காந்தி ஜெயந்தியையொட்டி, 'பேச வாங்க' என்ற நிகழ்ச்சி, குளத்துப்பாளையத்தில் நேற்று நடந்தது. இதில், காந்தி ஜெயந்தியையொட்டி, மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், தொண்டாமுத்தூர் தமிழ் இலக்கிய பேரவை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், பேச்சாளர்களை ஊக்குவிக்கவும், புதிய பேச்சாளர்களை உருவாக்கவும், ஒவ்வொரு பேச்சாளர்களுக்கும் தலா, 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில், ஆன்மிகம், ஜோதிடம், மூட நம்பிக்கை, ரத்த தானம், காந்தியின் பெருமை, சுற்றுச்சூழல், மரம் வளர்ப்பின் அவசியம், இலக்கிய ஆளுமைகள் என, பல தலைப்புகளிலும், பேச்சாளர்கள் சொற்பொழிவாற்றினர். இதில், பங்கேற்ற அனைவருக்கும் புத்தகம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
