/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு ஆதார் முகாம் கணபதிபுதுாரில் துவக்கம்
/
சிறப்பு ஆதார் முகாம் கணபதிபுதுாரில் துவக்கம்
ADDED : ஜூலை 20, 2025 01:31 AM

கோவை : தபால் துறை சார்பில், கணபதிபுதுாரில், சிறப்பு ஆதார் முகாம் நேற்று துவங்கியது.
கோவை கோட்ட தபால் துறை சார்பில், குட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை அஞ்சலகம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமை அஞ்சலகம் உட்பட பல்வேறு தபால் நிலையங்களில், ஆதார் சேவை வழங்கப்படுகிறது. தவிர, ஒவ்வொரு நாளும், கோவை கோட்டத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு பகுதிகளிலும், ஆதார் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கணபதிபுதுார் 10வது வீதியில், வாணியர் சேவா சங்கத்தில், நேற்று சிறப்பு முகாம் துவங்கியது. கோவை எம்.பி.,ராஜ்குமார் துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாளையும், நாளை மறுநாளும், ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, அழைப்பு விடப்பட்டுள்ளது.

