ADDED : செப் 16, 2025 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ஒட்டி, சூலுார் கிழக்கு மண்டல பா.ஜ. இளைஞர் அணி, இந்திய தபால் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் நேற்று துவங்கியது.
கலங்கல் ரோடு கருப்பராயன் கோவில் மண்டபத்தில், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை 18ம் தேதி வரை முகாம் நடக்கிறது. புதிய ஆதார் எடுத்தல், திருத்தம் செய்தல், கருவிழி, கைரேகை பதிவு செய்தல், பிறந்த தேதி மாற்றுதல், மொபைல் எண் இணைத்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, அசல் ஆதார் அட்டை மற்றும் அசல் ஆவணங்கள் எடுத்து வரவேண்டும்.
பா.ஜ., நிர்வாகிகள் பிரஷாந்த், விக்னேஷ் பிரபு, நந்தினி, ஹரிஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர். முன்னாள் நிர்வாகிகள் அசோக், ரவிக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.