/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உழவரைத் தேடி வேளாண்மை' சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
/
'உழவரைத் தேடி வேளாண்மை' சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
'உழவரைத் தேடி வேளாண்மை' சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
'உழவரைத் தேடி வேளாண்மை' சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
ADDED : ஆக 07, 2025 11:01 PM
நெகமம்; காட்டம்பட்டி சமுதாய நலக்கூடத்தில், உழவரைத் தேடி வேளாண்மை சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
தமிழக அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், உழவரைத் தேடி வேளாண்மை சிறப்பு முகாம், காட்டம்பட்டி ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
இதில், வேளாண் சார்ந்த தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, விற்பனை மற்றும் வணிகம், கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு, பட்டு வளர்ச்சி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இதில், வேளாண் சார்ந்த அனைத்து திட்டங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள், ஆலோசனைகள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படும். மேலும், விவசாயம் சார்ந்த புகார்களை மனுவாக முகாமில் வழங்கலாம். எனவே, விவசாயிகள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் தேவி மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.

