/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு பஸ்களில் கூட்டம் இல்லை
/
சிறப்பு பஸ்களில் கூட்டம் இல்லை
ADDED : அக் 27, 2025 10:05 PM
- நமது நிருபர் -: தீபாவளி கொண்டாட திருப்பூரில் இருந்து தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு பலரும் பயணித்தனர். தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் விரைவாக திருப்பூர் திரும்புவார்கள் என எதிர்பார்த்து, 24ம் தேதி இரவு துவங்கி, நேற்றுமுன்தினம் வரை, 70 சிறப்பு பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்கியது. ஆனால், ஞாயிற்றுக்கிழமையன்று, சிறப்பு பஸ்களில் எதிர்பார்த்த கூட்டமில்லை. மதுரை, தேனிக்கு திருப்பூர் கோவில்வழியில் இருந்து சென்ற சிறப்பு பஸ்கள் தலா 35 - 45 பயணிகளை மட்டுமே அழைத்து வந்தன.
திருச்சி, தஞ்சாவூரில் இருந்து திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு கூட்டம் இல்லாததால், சிறப்பு பஸ் இயக்கம் நேற்றுமுன்தினம் மதியத்துக்கு பின் குறைக்கப்பட்டது. சேலம், திருவண்ணாமலையில் இருந்து திருப்பூர் வரும் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

