/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷா செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
ஈஷா செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : ஜன 15, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:விடுமுறை நாளானதால், கோவை காந்திபுரம் நகர பஸ் ஸ்டாண்டிலிருந்து, பூண்டியிலுள்ள ஈஷா யோகா மையத்திற்கு மக்கள் அதிக ஆர்வத்துடன் சென்றனர்.
பொங்கல் பண்டிகையன்று, கிராமத்தையும் மலைப்பகுதியை இணைக்கும் வகையில், அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தை சுற்றிப்பார்க்கவும், அங்குள்ள ஆதியோகி சிலையை தரிசிக்கவும், நேற்று ஏராளமான மக்கள் திரண்டனர். பயணிகள் எண்ணிக்கை காந்திபுரத்தில் அதிகரித்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் நேற்று ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பஸ்களை இயக்கியது.