/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழனி திருச்செந்துாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
பழனி திருச்செந்துாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : பிப் 04, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; தைப்பூசத்திற்கு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பழனி, திருச்செந்துாருக்கு வரும் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தைப்பூசத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை குருந்தமலை, குமரன் குன்று பகுதிகளுக்கும், பழனி மற்றும் திருச்செந்துாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் பஸ்களுடன் கூடுதலாக 20 பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் மேட்டுப்பாளையம் கிளை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.-----