ADDED : செப் 25, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
உடுமலை: ரேஷன் கார்டுகளில், உறுப்பினர்கள், கைரேகை பதிவு செய்து கொள்ள, இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ரேஷன் கார்டுகளிலுள்ள குடும்ப உறுப்பினர்கள், கைரேகை ( இ–கே.ஒய்.சி.,) பதிவுகள் மேற்கொள்ள, 5 சிறப்பு முகாம்கள், அனைத்து ரேஷன் கார்டுகளில், விற்பனை முனைய இயந்திரம் வாயிலாக, விரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே நடந்த முகாம்களில், பதிவுகளை மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், விரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பின் வாயிலாக மேற்கொள்ள, இன்று அனைத்து ரேஷன் கடைகளிலும், சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
