ADDED : செப் 25, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: தடாகம் ரோடு, கோயில்மேடு, கிழக்கு பகுதியைச் சேர்ந்த பகவத்சிங்,57. இவர் அப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். நேற்று, 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென தீ பற்றியது. இதில் ஆம்புலன்ஸ் நாசமானது.
கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
