UPDATED : நவ 07, 2026 04:38 PM
ADDED : நவ 07, 2026 04:34 PM
கோவை: தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 13ம் தேதி நடக்கிறது.
மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்குதல், தனித்துவ அடையாள அட்டை (யு.டி.ஐ.டி.,) பதிவு மற்றும் புதுப்பித்தல், இலவச அறுவை சிகிச்சைக்கு பயனாளிகளை தேர்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரி வீல்சேர், காதொலி கருவி, ஸ்மார்ட் போன், செயற்கை கை, கால் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இதுதவிர, ஆதார் அட்டை, ரேஷன் கார்டில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.
புதிதாக யு.டி.ஐ.டி., அட்டைக்கு விண்ணப்பிக்க வருபவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் ஏற்கனவே மருத்துவ பரிசோதனை செய்திருந்தால், அதற்கான ஆவணங்களை கொண்டு வர அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
