ADDED : ஏப் 07, 2025 08:52 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் சிறப்பு முகாம், மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது. முகாமை, மேற்பார்வை பொறியாளர் கீதா தலைமை வகித்து, துவக்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்ட மின் நுகர்வோர்கள் பில்லிங் மற்றும் மீட்டர் பழுது, குறைந்த மின் அழுத்தம், பழுதடைந்த மின் கம்பம் மாற்றுதல் என, பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
முகாமில், மொத்தம், 106 மனுக்கள் பெறப்பட்டு, அதில், 6 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
