UPDATED : அக் 08, 2026 09:56 PM
ADDED : அக் 08, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 1,065 ஓட்டுச்சாவடி மையங்களில் நாளை, 10ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.
தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி, எஸ்.ஐ.ஆர்., நிறைவடைந்துள்ள மாநிலங்களில், 18 வயது பூர்த்தியடைந்து வாக்காளராக தகுதி பெற்றவர்கள், முதல்முறை வாக்காளர்கள், எஸ்.ஐ.ஆர்., பட்டியலில் விடுபட்டவர்களை, மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை, 10ம் தேதி நடக்கும் சிறப்பு முகாமில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து அளிக்கலாம்.
