UPDATED : அக் 08, 2026 09:57 PM
ADDED : அக் 08, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
கோவை: கொடிசியா வளாகத்தில் ரா மேட் கண்காட்சி 6 ம் தேதி துவங்கியது.
தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் பங்கேற்று தங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் குறித்த தகவல்களை கேட்டறிந்தனர். மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் எம்.சி.எக்ஸ்., மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தாழ்வுகளை எப்படி சீரான முறையில் பயன்படுத்திக் கொள்வது என்ற விளக்கங்களை அளித்தனர்.
சர்வதேச அளவில் தங்கம் மட்டுமின்றி, சில்வர், காப்பர், அலுமினியம், இயற்கை எரிவாயு, காரீயம் உள்ளிட்ட தொழிற்சாலையில் பயன்படும் முக்கிய உலோகங்களின் ஏற்ற இறக்க விலைகளை சிறக்கும் முறை குறித்து எடுத்துக் கூறினர். மூன்று நாள் நேற்றுடன் முடிந்தது.
