UPDATED : அக் 08, 2026 09:57 PM
ADDED : அக் 08, 2026 07:58 PM
கள் குடித்ததில் தகராறு
சரவணம்பட்டி: மணியகராம்பாளையம் துரைசாமி, வெள்ளக்கிணறில் கள் குடிக்க சென்றார். முன்விரோதம் காரணமாக சரவணம்பட்டி வெங்கடேஷ் உடன் தகராறு ஏற்பட்டது. வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் துரைசாமி வீட்டிற்கு சென்று தாக்கினார். காயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
நகை பறிக்க முயற்சி
காந்திபுரம்: பாப்பநாயக்கன்பாளையத்தில் வசிக்கும் அகிலாண்டேஸ்வரி, அதிகாலை வாசலில் கோலமிட சென்ற போது , பைக்கில் வந்த இளைஞர் நகையை பறிக்க முயன்றபோது அவர் சத்தமிட்டதால் தப்பி ஓடினான். காட்டூர் போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்கின்றனர்.
நம்பிக்கை மோசடி வழக்கு
சிங்காநல்லுார்; இருகூரை சேர்ந்தவர் விஜயா, நன்கு பழக்கமான கோகிலாமணிக்கு, தனது ஆறு சவரன் நகையை அவசர தேவைக்காக கொடுத்தார். ஓராண்டு கடந்தும் நகையை தராமல் ஏமாற்றியதால் விஜயா புகார் அளித்தார். சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை வழக்கில் 9 பேர் கைது
சாய்பாபா காலனி: புகையிலை பொருள் விற்பனை செய்ததாக நகரில் 7 வழக்குகள் பதிவு செய்து, 9 பேரை கைது செய்தனர். பெரியகடை வீதி ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 4 ம் சரவணம்பட்டியில் 2 ம் சாய்பாபாகாலனியில் ஒன்று பதிவானது. 79 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
