/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியின மக்களுக்கு நாளை சிறப்பு முகாம்
/
பழங்குடியின மக்களுக்கு நாளை சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 29, 2025 12:49 AM
அன்னூர்: அன்னூரில் பழங்குடியின மக்களுக்கு நாளை (30ம் தேதி) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கோவை மாவட்ட நிர்வாகம் பழங்குடியின மக்களுக்கு 13 ஊர்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவித்தது. இந்த முகாம் கடந்த 23ம் தேதி பெரியநாயக்கன்பாளையத்தில் துவங்கியது.
தொடர்ந்து ஆனைமலை, காரமடை, வால்பாறை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்குமற்றும் எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் முகாம் முடிவடைந்தது.
அடுத்த முகாம் வருகிற 30ம் தேதி, அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறும். 'பழங்குடியின மக்கள் பங்கேற்று, தங்கள் தேவைகளை தெரிவிக்கலாம். அதிகாரிகள் உரிய வழிகாட்டுதல் அளிப்பார்கள். கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.