/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் துவக்கம்
/
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் துவக்கம்
ADDED : ஜூன் 22, 2025 11:31 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் இன்று பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் துவங்குகிறது.
தமிழக அரசின் தொல்குடி திட்டத்தில் பழங்குடியினருக்கான நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் கோவையில் இன்று முதல், 30ம் தேதி வரை நடக்கிறது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் இன்று துவங்கும் முகாமில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வசித்து வரும் பழங்குடியினர் தங்களுக்கு தேவையான பிறப்பு, இருப்பிட, ஜாதி சான்றிதழ்கள், ஆதார், ரேஷன், மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், வேலைவாய்ப்பு வாழ்வாதார திட்டங்கள் போன்றவை தொடர்பாக மனுக்களை வழங்கி பயனடையலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.