/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்
/
பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்
ADDED : ஜூன் 23, 2025 10:54 PM

வால்பாறை; மத்திய அரசின் திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் சிறப்பு முகாம் துவக்க விழா தாசில்தார் மோகன்பாபு தலைமையில் நடந்தது. தாலுகா அலுவலகத்தில் நாளை, (25ம் தேதி) வரை இந்த முகாம் நடக்கிறது.
வால்பாறை மலைப்பகுதியில் உள்ள பல்வேறு செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுக்கள் வாயிலாக வழங்கினர்.
அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் உள்ள பல்வேறு செட்டில்மென்ட் பகுதியில் வசிக்கும் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், அவர்களின் குறைகளை கேட்டறிந்த பின் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
முகாமில், தலைமையிடத்து துணை தாசில்தார் முத்து, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.