ADDED : ஆக 05, 2025 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னூர் தாலுகாவில் பொகலூர் மற்றும் வடவள்ளி ஊராட்சி பொதுமக்களுக்கான 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், பொகலூர், சமுதாய நலக்கூடத்தில், வரும் 8ம் தேதி காலை 9:30 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் சிறப்பு திட்ட செயலாக்கத் திட்ட துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, உள்ளிட்ட 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
'பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை உரிய ஆவணங்கள் இணைத்து முகாமில் சமர்ப்பித்து பயன் பெறலாம்,' என, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்