ADDED : ஜன 29, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
கோவை: புதிரை வண்ணார் இன மக்களுக்கான சிறப்பு முகாம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 30ம் தேதி நடைபெறுகிறது.
காலை 10 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இம்முகாமில், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு, பிறப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட இதர சான்றிதழ்களைப் பெறவும், அடிப்படை வசதிகள் தொடர்பான சேவைகளும் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
