/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளி மாநில தொழிலாளர்களின் விவரம் சேகரிக்க சிறப்பு முகாம்
/
வெளி மாநில தொழிலாளர்களின் விவரம் சேகரிக்க சிறப்பு முகாம்
வெளி மாநில தொழிலாளர்களின் விவரம் சேகரிக்க சிறப்பு முகாம்
வெளி மாநில தொழிலாளர்களின் விவரம் சேகரிக்க சிறப்பு முகாம்
ADDED : ஜன 03, 2025 10:50 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க, அப்பகுதிகளில் வரும் நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், முடிதிருத்தும் கடைகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லுாரிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர்.
வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், அவர்களது அடையாள அட்டை தொடர்பான ஆவணங்களை பெற்று பணியமர்த்த வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தொழிலாளர்களின் விவரங்களை தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள labour.tn.gov.in/ism என்ற சிறப்பு வலைதள முகவரியில் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''வரும் நாட்களில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி, வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம். நிறுவனங்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,'' என்றனர்.

