/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சின்னியம் பாளையத்தில் இன்று சிறப்பு முகாம்
/
சின்னியம் பாளையத்தில் இன்று சிறப்பு முகாம்
ADDED : ஆக 29, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சின்னியம்பாளையம் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று நடக்கிறது.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்னியம்பாளையம் ஊராட்சியில் இன்று காலை, 9:30 முதல் மாலை, 4:00 மணி வரை, ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு, பிருந்தாவன் கல்யாண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை, வேளாண்துறை உள்ளிட்ட, 17 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெற வருவாய்த் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.