/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணேசபுரத்தில் நாளை சிறப்பு முகாம்
/
கணேசபுரத்தில் நாளை சிறப்பு முகாம்
ADDED : ஆக 17, 2025 10:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; கணேசபுரத்தில், நாளை நடைபெறும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்னுார் தாலுகாவில் நாளை (19ம் தேதி) காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, காட்டம்பட்டி மற்றும் குப்பேபாளையம் ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு, கணேசபுரம், காளியப்பா திருமண மண்டபத்தில் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில், வருவாய்த்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை உள்ளிட்ட 17 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
'பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்,' என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.