/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் திட்டங்களை தெரிவிக்க கிராமங்களில் சிறப்பு முகாம்
/
வேளாண் திட்டங்களை தெரிவிக்க கிராமங்களில் சிறப்பு முகாம்
வேளாண் திட்டங்களை தெரிவிக்க கிராமங்களில் சிறப்பு முகாம்
வேளாண் திட்டங்களை தெரிவிக்க கிராமங்களில் சிறப்பு முகாம்
ADDED : ஆக 08, 2025 07:26 PM
நெகமம்:
நெகமம், காட்டம்பட்டியில், உழவரை தேடி வேளாண்மை திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், உழவரை தேடி வேளாண்மை, உழவர் நலத்துறை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நேற்று காட்டம்பட்டி ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம், 'அட்மா' தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்தது. இதில், வேளாண் உதவி இயக்குனர் தேவி, துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
முகாமில், வேளாண் சார்ந்த அனைத்துத் திட்டங்கள், பயிர் காப்பீடு, சொட்டுநீர் பாசனம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும் நம்மாழ்வார் விருது பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண்மையில் இயந்திர மயமாக்குதல் திட்டம் குறித்தும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கு வரும் நோய்கள், தடுப்பு முறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெரும் வழிமுறைகள் பற்றியும், ஒழுங்குமுறை விற்பனை கூட திட்டங்கள், பட்டு வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தகவல்களும் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று தோட்டக்கலை துறை சார்பில், தேவணாம்பாளையம் சமுதாய நலக்கூடத்தில் விவசாயிகளுக்கு முகாம் நடந்தது.