/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.,ல் பெண்களுக்கான சிறப்பு புற்றுநோய் தடுப்பு முகாம்
/
கே.எம்.சி.எச்.,ல் பெண்களுக்கான சிறப்பு புற்றுநோய் தடுப்பு முகாம்
கே.எம்.சி.எச்.,ல் பெண்களுக்கான சிறப்பு புற்றுநோய் தடுப்பு முகாம்
கே.எம்.சி.எச்.,ல் பெண்களுக்கான சிறப்பு புற்றுநோய் தடுப்பு முகாம்
ADDED : பிப் 06, 2025 09:48 PM
கோவை, அவிநாசி ரோட்டில் உள்ள, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், பெண்களுக்கான சிறப்பு புற்றுநோய் தடுப்பு முகாம், மார்ச் 1ம் தேதி வரை நடக்கிறது. சலுகை கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கே.எம்.சி.எச்., நிர்வாகத்தினர் கூறியதாவது:
கர்ப்பப்பை கட்டி என்பது பெண்களுக்கு சாதாரணமாக காணப்படும் ஒரு ஆபத்து இல்லாத கட்டி. இருப்பினும் இதை அலட்சியப்படுத்தக்கூடாது.
மாதவிடாய் காலங்களில் அதிக வலி, அதிக உதிரப்போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலம் கழிப்பதில் சிரமம் போன்றவை கர்ப்பப்பை கட்டிக்கான அறிகுறிகளாகும்.
இதை கண்டறிய பேப் ஸ்மியர் மற்றும் எச்.பி.வி., பரிசோதனைகள் உள்ளன. எச்.பி.வி. தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் வாயிலாக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது இந்தியப் பெண்களிடையே காணப்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது 'ஹூயூமன் பாப்பிலோமா (எச்.பி.வி.,) என்ற வைரஸ் வாயிலாக ஏற்படுகிறது.
சுமார் 80 - 90 சதவீதம் பெண்களுக்கு எச்.பி.வி., தொற்று ஏற்படலாம். 10 - -15 சதவீதம் பெண்களுக்கு இது புற்றுநோயாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வைரஸ் தொற்றுக்கு எந்த அறிகுறியும் இருக்காது.
குறிப்பிட்ட காலத்தில், பரிசோதனை மட்டும்தான் இத்தொற்றை கண்டறிய உதவும். பரிசோதனைகள் மற்றும் தகுந்த சிகிச்சை அளிப்பதன் வாயிலாக வைரஸ் தொற்றை குணப்படுத்தி புற்றுநோயை தடுக்கலாம்.
பெண்களுக்கு இப்பாதிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனையில், கருப்பை கட்டி மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாம், கடந்த, பிப்., 1ல் துவங்கியது, மார்ச் 1ம் தேதி வரை நடக்கிறது.
முகாமில், 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பங்கேற்கலாம். மேலும், ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக ரத்தப்போக்கு, எடை இழப்பு, அடிவயிற்றில் தொடர் வலி, பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் இருப்போர் இம்முகாமில் பங்கேற்று மருத்துவர் ஆலோசனையை இலவசமாக பெறலாம். இத்துடன் பரிசோதனை மற்றும் பரிந்துரைக்கப்படும் சிகிச்சையை சலுகை கட்டணத்தில் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு, அவர்கள் கூறினர்.