/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.,மருத்துவமனையில் இருதய பரிசோதனை சிறப்பு முகாம்
/
கே.எம்.சி.எச்.,மருத்துவமனையில் இருதய பரிசோதனை சிறப்பு முகாம்
கே.எம்.சி.எச்.,மருத்துவமனையில் இருதய பரிசோதனை சிறப்பு முகாம்
கே.எம்.சி.எச்.,மருத்துவமனையில் இருதய பரிசோதனை சிறப்பு முகாம்
ADDED : ஆக 01, 2025 09:31 PM
கோ வை - அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், இருதய பரிசோதனைக்கான சிறப்பு முகாம், வரும் 4ல் துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.
கே.எம்.சி.எச்., நிர்வாகத்தினர் கூறியதாவது:
இருதயத்தில் பாதிப்பு மற்றும் ரத்தக்குழாய் அடைப்பால், மாரடைப்பு ஏற்படுகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு, உடல் பருமன், புகை பிடித்தல், உடற்பயிற்சி இல்லாதது, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால், இருதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொழுப்பு, உப்பு, ரத்த அழுத்தம், ஈ.சி.ஜி., டி.எம்.டி., அல்லது எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகள் வாயிலாக, இருதய பாதிப்புகளை கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற்று நலம் பெறலாம்.
கே.எம்.சி.எச்.,ல் இருதயம், இருதய அறுவை சிகிச்சை, இருதய மின் செயல்பாடு, இருதய சிகிச்சை மயக்க மருந்து, தீவிர சிகிச்சை மற்றும் பிற துறைகளை சேர்ந்த அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் ஒருங்கிணைந்து, சிகிச்சை அளிக்கின்றனர். அனைத்து இருதய நோய்களுக்கும் சர்வதேச தரத்திலான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இருதய அடைப்பு உள்ளதா என்பதை உறுதி செய்ய, ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அடைப்பு இருந்தால், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை வாயிலாக, அடைப்புகள் நீக்கப்படும்.
இம்மருத்துவமனையில் இருதய பரிசோதனை சிறப்பு முகாம், வரும் 4ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை, 7:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கும் இம்முகாமில், சர்க்கரை பாதிப்பு, கொழுப்பு சத்தின் அளவு, கிரியேட்டினின், ஈ.சி.ஜி., எக்கோ அல்லது டி.எம்.டி., மற்றும் மருத்துவர் ஆலோசனை பெறலாம். இப்பரிசோதனைகளுக்கு, ரூ.1,750 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரைக்கும், சிகிச்சைகளை சலுகை கட்டணத்தில் பெறலாம்.
மேலும் விவரங்கள் மற்று ம் முன்பதிவுக்கு, 87548- 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.