/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு: பள்ளிகளில் தீவிரம்
/
பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு: பள்ளிகளில் தீவிரம்
பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு: பள்ளிகளில் தீவிரம்
பொதுத்தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு: பள்ளிகளில் தீவிரம்
ADDED : நவ 07, 2025 08:50 PM
பொள்ளாச்சி: பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கச்செய்ய, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், சனிக்கிழமைதோறும், பள்ளிகளுக்கு முழுமையாக விடுமுறை இருந்தாலும், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது, பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் காலை, மாலை மட்டுமின்றி, சனிக்கிழமைகள் தோறும் சிறப்பு வகுப்பு நடத்த தலைமையாசிரியர்கள் ஆயத்தமாகி உள்ளனர்.
அன்றைய தினம், ஏதேனும் ஒரு பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து, மாணவர்களுக்கு எழுத்துப்பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பிளஸ் 2 பொதுத்தேர்வு, 2026ல், மார்ச் 2ம் தேதி துவங்கி மார்ச் 26ம் தேதி நிறைவடைய உள்ளது. இவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்., 9ம் தேதி துவங்கி 16ல் முடிகிறது.
அதேபோல, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்., 6 வரை நடத்தப்படுகிறது. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்யும் பொருட்டு, பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் காலை மற்றும் மாலை மட்டுமின்றி சனிக்கிழமைதோறும், சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.
கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்பு பெரிதும் பயன்படும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு முழுமையாக பயிற்சி அளிக்க முடியும். அதேநேரம், சில பள்ளிகளில், தொலைதுார பகுதிகளில் இருந்து வருவது, நேரமின்மை உட்பட பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டி ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்த மறுக்கின்றனர்.
இவ்வாறு, கூறினர்.

