/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் உலா வரும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
/
வால்பாறையில் உலா வரும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
வால்பாறையில் உலா வரும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
வால்பாறையில் உலா வரும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
ADDED : நவ 07, 2025 08:50 PM
வால்பாறை: வால்பாறை நகரில் உலா வரும் சிறுத்தையை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும் வன விலங்குகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் எஸ்டேட் பகுதியில் நடமாடும் சிறுத்தை, சமீப காலமாக மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரிலும் உலா வரத்துவங்கியுள்ளது.
வாழைத்தோட்டம் பகுதியை ஒட்டியுள்ள தேயிலை எஸ்டேட்டில், இரு நாட்களுக்கு முன் மாலையில் சிறுத்தை நடந்து செல்வதை அப்பகுதி மக்கள் நேரில் கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதே போல் வால்பாறை கோ-ஆப்ரேடிவ் காலனி, கக்கன்காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு நேரத்தில் சிறுத்தை நடந்து செல்வது, இங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை உலா வருவதால் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வாழைத்தோட்டம் பகுதியில் மாலை நேர டியூசன் முடிந்து மாணவர்களும், பல்வேறு கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்லும் போது, சிறுத்தையால் அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்,' என்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நகரில் உள்ள பெரும்பாலான வீடுகளில், சிறுத்தைக்கு பிடித்தமான நாய், ஆடு, மாடு, கோழிகளை வளர்க்கின்றனர். இதனால் இரவு நேரத்தில் உணவு தேடி வரும் சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது. பொதுமக்கள் வீடுகளில் வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். மார்க்கெட் பகுதியில் உள்ள இறைச்சிக்கடைகளில் திறந்தவெளியில் இறைச்சிக்கழிவுகள் வீசக்கூடாது,' என்றனர்.

