/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
/
காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : நவ 07, 2025 08:50 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் காட்டுப்பன்றிகள் தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி தி.மு.க., கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், வனத்துறை அமைச்சரிடம் மனு கொடுத்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த, ஐந்து மாதங்களாக சுற்றித்திரியும் காட்டு யானைகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன், சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை, ஐந்து பேர் இறந்துள்ளனர்.
குளிர்காலங்களில் யானைகள், அதிகளவு பொதுமக்கள் வசிக்கும் இடங்களை நோக்கி வருவதால், அதை தடுத்து மக்கள் அச்சமின்றி யானைகள் தொந்தரவு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், ஆனைமலை ஆகிய பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்து வனத்தில் விட வேண்டும்.
ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் விவசாய பயிர்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வேண்டும். கேரளா மாநிலத்தில் உள்ளதை போன்று, சுட்டுப்பிடித்து கட்டுப்படுத்த வேண்டும்.
விவசாய பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை கட்டுப்படுத்தி விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும்.
சூலுார் சட்டசபை தொகுதியில் மந்திரிகிரி வேலாயுதசுவாமி கோவிலில், விரைவில் புதிதாக சந்தன தேருக்கு சந்தன காப்புக்கு, சந்தன கட்டைகள் விலைக்கு பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

