/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதி இல்லாமல் வெட்டப்படும் மரங்கள்
/
அனுமதி இல்லாமல் வெட்டப்படும் மரங்கள்
ADDED : நவ 07, 2025 08:51 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், அனுமதி இல்லாமல் வெட்டிய மரங்களை ரயில்வே போலீசார் நேரில் ஆய்வு செய்தனர்.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் பிரதான ரோடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், சீமை கருவேல மரங்கள் இருந்தது. இதை அகற்றம் செய்ய, ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் டெண்டர் விட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அம்மரங்கள் அகற்றும் பணி, சில நாட்களாக நடந்து வருகிறது. இதில், கடந்த ஐந்து நாட்களுக்கு முன், கருவேல மரங்களுடன் சேர்த்து, உரிய அனுமதி பெறாமல் ரயில்வே ஸ்டேஷன் சுற்றுப்பகுதிகளில் உள்ள சில வேப்ப மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதைக் கண்ட ரயில் பயணியர் சிலர், ரயில்வே நிர்வாகத்தில் புகார் அளித்தனர். பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட போலீசார், நேற்று மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில், கருவேல மரம் தவிர்த்து, அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டிய ஒப்பந்ததாரர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.

