/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள் அவதி
/
ரோட்டில் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள் அவதி
ADDED : நவ 07, 2025 08:52 PM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தாமரைக்குளம் சர்வீஸ் ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் சர்வீஸ் ரோடு வழியாக தினமும் ஏராளமான மக்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர்.
இந்த ரோட்டில் அதிக அளவில் கழிவு நீர் வழிந்தோடுவதால், இவ்வழியில் பயணிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும், இப்பகுதியில் கடைகள் மற்றும் வீடுகள் அதிகளவில் உள்ளது. இதனால் இங்கு உள்ளவர்களுக்கு சுவாச கோளாறு, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சர்வீஸ் ரோட்டில் மக்கள் நடந்து செல்லும் போது, கழிவு நீரை மிதித்து செல்லும் நிலை உள்ளது. எனவே, ரோட்டில் வழிந்தோடும் கழிவுநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'தாமரைக்குளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், சர்வீஸ் ரோடு அளவீட்டுப் பணிகள் இன்னும் முடியவில்லை. பணிகள் நிறைவடைந்தவுடன், விரைவில் இங்கு கழிவு நீர் வெளியேற புதிதாக கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

