/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம்
/
அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம்
ADDED : டிச 03, 2024 09:08 PM

அன்னுார்; அன்னுார், ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜையை முன்னிட்டு, அய்யப்பனுக்கு பொன் ஆபரணத்தில் அலங்காரம் செய்யப்பட்டது.
அன்னுார் ஐயப்பன் கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி செய்யப்பட்டு, கடந்த மாதம் 14ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 15ம் தேதி முதல் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
நேற்று ஐயப்பனுக்கு பல்வேறு வகை பொன் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக அபிஷேக பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. படி பூஜை குழு சார்பில் பஜனை நடந்தது. திரளான அய்யப்ப பக்தர்கள் பங்கேற்றனர். வருகிற 8ம் தேதி மண்டல பூஜை நிறைவு விழா நடக்கிறது. செண்டை மேளம், ஜமாப் இசையுடன், புலி வாகனத்தில், அய்யப்பன் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து அருள் பாலிக்கிறார்.