/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெல்லை பெரிய லாலாவில் இன்று சிறப்பு தள்ளுபடி
/
நெல்லை பெரிய லாலாவில் இன்று சிறப்பு தள்ளுபடி
ADDED : ஆக 16, 2025 09:05 PM
கோவை; கோவை, காந்திபுரம் ஸ்ரீ முருக விலாஸ் ஒரிஜினல் நெல்லை பெரியலாலா கார்னர் ஸ்வீட்ஸில், ஆண்டு விழா முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது.
இதன் நிர்வாகிகள் மாரியப்பன், ரகு கூறியதாவது:
எங்கள் கடையின் 59வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, நாளை( இன்று- 17ம் தேதி) வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து வகையான இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு, கிலோ ஒன்றுக்கு அதன் விலையில் இருந்து, ரூ.100 சிறப்பு சலுகை வழங்குகிறோம்.
இச்சலுகை, கோவை காந்திபுரம் சிக்னல் அருகில் உள்ள, ஸ்ரீ முருகவிலாஸ் ஒரிஜினல் நெல்லை பெரியலாலா கார்னர் ஸ்வீட்ஸ் மற்றும் 100 அடி ரோடு, வடவள்ளி, சரவணம்பட்டி, துடியலுார், பெரியநாயக்கன்பாளையம், சிட்ரா, சுந்தராபுரம், கணபதி, இடையர்பாளையம், குரும்பபாளையம், சாய்பாபா காலனி, சிங்காநல்லுார், அவிநாசி மற்றும் திருப்பூரில் உள்ள கிளைகளிலும் வழங்கப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.