ADDED : பிப் 20, 2024 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை:ஆனைமலை அருகே, பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேசிய பார்வை இழப்பு தடுப்பு திட்டம், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம், சுப்பேகவுண்டன்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது.
ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். உதவி கண் மருத்துவ அலுவலர்கள் அசோகன், முபாரக் பேகம், சுகாதார ஆய்வாளர் சரத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜசேகர், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லத்துரை, செவிலியர்கள், சுகாதார தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முகாமில், 50 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனர். நான்கு பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

