/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை நான்கு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
/
நாளை நான்கு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
நாளை நான்கு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
நாளை நான்கு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : பிப் 22, 2024 04:44 AM
அன்னுார்: அன்னுார் ஒன்றியத்தில், நான்கு ஊராட்சிகளில், நாளை (23ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
நுாறு நாள் வேலைத்திட்டத்தில், அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளிலும், குளம், குட்டை துார் வாருதல், தனியார் தோட்டங்களில் வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படுகின்றன. கடந்த 2022 ஏப். 1 முதல் 2023 மார்ச் 31ம் தேதி வரை செய்யப்பட்ட பணிகள் குறித்து, சிறப்பு தணிக்கையாளர்கள் குழு சமூக தணிக்கை செய்கிறது.
கரியாம்பாளையம், காரேகவுண்டன்பாளையம், கனுவக்கரை, கஞ்சப்பள்ளி ஆகிய நான்கு ஊராட்சிகளில், கடந்த 19ம் தேதி சமூக தணிக்கை துவங்கியது. வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில் தணிக்கையாளர்கள், நுாறு நாள் வேலை திட்டத்தில் உருவாக்கப்பட்ட சொத்துக்களை அளவீடு செய்தனர்.
ஊராட்சி அலுவலகத்தில் ஆவணங்களை ஆய்வு செய்தனர். பயனாளிகளிடம் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தை ஆய்வு செய்தனர். இன்று, சமூகத் தணிக்கை நிறைவடைகிறது.
நான்கு நாட்கள் தணிக்கை செய்து அதனுடைய அறிக்கை நாளை (23ம் தேதி) நடக்கும் கிராம சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று தணிக்கை குழு தெரிவிக்கும், ஆட்சேபனைகள், குறைகள் குறித்து விவாதிக்கலாம். நுாறு நாள் திட்டத்தில், சந்தேகம் இருந்தால் கேட்டு தெளிவு பெறலாம்.