/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
/
10 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 29, 2025 10:31 PM
அன்னுார்; கோவை மாவட்டத்தில் 10 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், செய்யப்பட்ட பணிகள் அளவீடு செய்யப்பட்டன. தொழிலாளர்களின் வேலை அட்டைகள், ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அன்னுார் ஒன்றியத்தில், குப்பனுார், காரமடை ஒன்றியத்தில் ஓடந்துறை, சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் வடவள்ளி உள்பட 10 ஊராட்சிகளில் நேற்றுடன் சமூக தணிக்கை முடிந்தது.
இன்று தணிக்கை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நாளை (31ம் தேதி) காலை 11: 00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.