/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்து ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
/
பத்து ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : நவ 06, 2024 11:44 PM
அன்னுார் ; கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அன்னுார் ஒன்றியத்தில் ஆம்போதி, காரமடை ஒன்றியத்தில் ஜடையம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் நாயக்கன்பாளையம், உள்ளிட்ட 10 ஊராட்சிகளில், கடந்த இரண்டு நாட்களாக பணிகள் நடைபெற்ற இடத்தில் கள ஆய்வு செய்யப்பட்டு அளவீடுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து இன்று சமூகத் தணிக்கை அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
நாளை காலை 11:00 மணிக்கு, 10 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் எவ்வளவு பணிகள் செய்யப்பட்டன. எத்தனை பேருக்கு வேலை அளிக்கப்பட்டது. என்ன மதிப்பீடு, தணிக்கையில் ஆட்சேபனைகள் என்னென்ன என்பது குறித்த அறிக்கை வாசிக்கப்படுகிறது. அன்னுார் வட்டாரத்தில் வட்டார வள அலுவலர் கனகராஜ் தலைமையில் தணிக்கையாளர்கள் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.