/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 ஊராட்சிகளில் 20ல் சிறப்பு கிராம சபை
/
10 ஊராட்சிகளில் 20ல் சிறப்பு கிராம சபை
ADDED : டிச 17, 2024 11:27 PM
கோவில்பாளையம்; கோவை மாவட்டத்தில், காரேகவுண்டம்பாளையம் உள்பட 10 ஊராட்சிகளில், சமூக தணிக்கை துவங்கியது. வரும் 20ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கடந்த ஆண்டு, ஏப். 1 முதல், நடப்பு ஆண்டு மார்ச் 31 வரை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், செய்யப்பட்ட பணிகள் மற்றும் 2016 முதல் 2021ம் ஆண்டு வரை, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் குறித்த, சமூக தணிக்கை, கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு வாரமும், பத்து ஊராட்சிகளில் நடக்கிறது.
நடப்பு வாரத்தில், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், சின்ன தடாகம் ஊராட்சி, அன்னுார் ஒன்றியத்தில், காரே கவுண்டன்பாளையம், காரமடை ஒன்றியத்தில் வெள்ளியங்காடு, சூலுார் ஒன்றியத்தில், பட்டணம், சுல்தான் பேட்டை ஒன்றியத்தில் எஸ்.அய்யம்பாளையம் உள்பட 10 ஊராட்சிகளில், நேற்றுமுன்தினம் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.
இதையடுத்து நேற்று வேலை அட்டை, வருகை பதிவேடு, களத்தில் செய்யப்பட்ட பணிகளை அளவீடு செய்தல் ஆகிய பணிகள் நடந்தது. வரும் 20ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இதில் சமூக தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. பொதுமக்கள் இதில் பங்கேற்க ஊரக வளர்ச்சித் துறை அழைப்பு விடுத்துள்ளது.