/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை; 1,731 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை; 1,731 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை; 1,731 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை; 1,731 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : நவ 24, 2024 11:13 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை ஒன்றியத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 1,731 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொள்ளாச்சி தெற்கு, வடக்கு, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட 118 ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடந்தது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள, 26 ஊராட்சிகளில், பெண்கள், 2,456 பேர் உட்பட 4,366, பேர் பங்கேற்றனர். மொத்தம், 391 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் உள்ள, 39 ஊராட்சிகளில், பெண்கள், 3,357 பேர் உட்பட, 5,980 பேர் பங்கேற்றனர். மொத்தம், 614 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகளில், பெண்கள், 1,942 பேர் உட்பட, 3,716 பேர் பங்கேற்றனர். அதில், 218 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளில், சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சி பகுதிகளில் சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
கிராமப்புறங்களில் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.துாய்மை பாரதம், ஜல் ஜீவன் மற்றும் தீன்தயாள் உபாத்யாய இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் ஊராட்சியின் அடிப்படை தேவைகளான ரோடு, குடிநீர் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கிராமசபை கூட்டத்தில், 508 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், 2,500 பெண்கள் உட்பட, 5,525 பேர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி கோட்டத்தில் தெற்கு, வடக்கு மற்றும் ஆனைமலையில் உள்ள, 118 ஊராட்சிகளில், 1,731 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மொத்தம், 19,587 பேர் பங்கேற்றனர்.