/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பனுாரில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
/
குப்பனுாரில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஜூலை 16, 2025 10:12 PM
அன்னுார்; குப்பனுாரில் நாளை (18ம் தேதி) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், குப்பனுார் ஊராட்சியில், கடந்த நிதி ஆண்டில் 52 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 36 பணிகள் செய்யப்பட்டுள்ளன.
இப்பணிகளை வட்டார வள அலுவலர் இம்மானுவேல் தலைமையில் தணிக்கையாளர்கள் கடந்த மூன்று நாட்களாக சமூக தணிக்கை செய்து வருகின்றனர்.
செய்யப்பட்ட பணிகளை களத்தில் அளவீடு செய்து, தொழிலாளர்களின் வேலை அட்டையை பரிசோதித்து வருகின்றனர். இன்று தணிக்கை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. நாளை (18ம் தேதி) காலை 11:00 மணிக்கு, குப்பனுாரில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தணிக்கை அறிக்கை வாசிக்கப்படுகிறது.
பொதுமக்கள் பங்கேற்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.